இலவச இணையச் சேவையின் வேகம் இரட்டிப்பாக்கப்படும்

சிங்கப்­பூ­ரில் இலவச பொது வை=ஃபை Wi­r­e­l­e­ss@SG சேவை வழங்­கும் இணையப் பயன்­பாட்டு வேகம் இவ்­வாண்டு இறு­திக்­குள் இரு­ம­டங்காகி 5Mbps வரை அதி­க­ரிக்­கப்­படும். சிங்கப்­பூ­ரின் அறி­வார்ந்த தேச நோக்­கத்தை நிறை­வேற்­றக்­கூ­டிய முக்­கி­ய­மான அம்­ச­மாக இந்தக் கட்­டமைப்பை அர­சாங்கம் கரு­து­கிறது. பொது­மக்­களின் கைபேசி அகன்ற­கற்றைத் தேவையைப் பூர்த்தி செய்ய தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்களின் 4ஜி கட்­டமைப்பை மேம்படுத்த Wi­r­e­l­e­ss@SG சேவை வழங்­கப்படும் இடங்களின் எண்­ணிக்கை­யும் இரட்­டிப்­பாக்­கப்­படும்.

2018ஆம் ஆண்­டுக்­குள் இந்த எண்­ணிக்கை 20,000ஐ எட்டும். "எங்கும் வியா­பித்­தி­ருக்­கக்­ கூ­டிய, இடை­வெ­ளி­யற்ற, உயர்­வேக இணைய இணைப்பை மக்­களுக்­கும் வர்த்­த­கங்களுக்­கும் வழங்க நாம் முதல் தரமான கட்­டமைப்பை உரு­வாக்க வேண்டும்," என்று இந்த மேம்பாடு குறித்து நேற்று நாடா­ளு­மன்றத்­தில் தொடர்பு, தகவல் துணை அமைச்­சர் டாக்டர் ஜனில் புதுச்­சேரி அறி­வித்­தார். தற்­போதைய Wi­r­e­l­e­ss@SG சேவையின் வேகம் பொதுவான 4ஜி கைபேசிக் கட்­டமைப்பு வழங்­கும் வேகத்தை­வி­டக் குறைவாக இருக்­கிறது என்று குறிப்­பிட்ட சுவா சூ காங் குழுத்­தொ­கு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஸாக்கி முகமது, அந்தச் சேவையின் வேகம் அதி­க­ரிக்­கப்­படுமா என்று கேள்வி எழுப்­பினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!