ஜனவரி முதல் ஏப்ரல் 5 வரை மிக ஆபத்தான 9 பாரந்தூக்கி விபத்துகள்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜன வரிக்கும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கும் இடையில் பாரந்தூக்கி சம்பந்தப் பட்ட ஆபத்துமிக்க ஒன்பது விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் கடைசி மூன்று விபத்துகள் பத்து நாட்களில் நிகழ்ந்தன. வேலையிட பாதுகாப்பு, சுகாதார மன்றம் நேற்று இதனைத் தெரிவித்தது. கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த விபத்தில் ஒரு பாரந் தூக்கி ஒரு கட்டடத்தின் விளிம் பில் விழுந்துவிட்டது.

அதில் பாரந்தூக்கி ஓட்டுநர் அதே இடத் தில் மரணமடைந்தார். இதர இரண்டு சம்பவங்களில் ஊழியர்கள் காயம் அடைந்தனர். பாரந்தூக்கி இயக்குவோரில் சிலருக்குப் போதிய பயிற்சி இல்லை. பாரந்தூக்கித் தயாரிப்பா ளர்கள் விதித்துள்ள நிபந்தனை கள் அலட்சியப்படுத்தப்படுகின் றன. அல்லது பாரந்தூக்கிகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. இவையே விபத்துக்குக் கார ணம் என்று தேசிய பாரந்தூக்கி பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழு வின் தலைவர் முகம்மது அப்துல் அக்பர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!