‘ஒன்றுபட்ட சமூகத்திற்கு அனைவரும் பங்காற்றுக’

தமிழவேல்

படிப்படியான சமயச் சிந்தனைக்கான வழிகாட்டிகள், எதிர்கால சமயத் தலைவர்களை உருவாக்குதல், சிங்கப்பூரின் பல இன சமூகத்தை வலுப்படுத்தும் விதமாக சமயக் கல்வியை மேம்படுத்துதல் போன்ற பல முயற்சிகளை இங்குள்ள முஸ் லிம் அமைப்புகள் மேற்கொள்ளும். முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் சவால்மிக்க சமூக-, சமயச் சூழலைச் சமாளிக்கும் சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகத்தின் திட்டங்களை விவரித்தார்.

மேலும் இணையத்தில் பரவும் தீவிரவாதத் தாக்கத்தை எதிர் கொள்ள, குறிப்பாக இளையர்களை அதிலிருந்து காக்கும் முயற்சிகளும் துரிதப்படுத்தப்படவுள்ளன. தீவிரவாதத்திற்காகத் தடுப்புக் காவலில் உள்ளவர்களை நேர்வழிப் படுத்த கடந்த 2003ஆம் ஆண்டு முஃப்தி அலுவலகமும் சமய மறு வாழ்வுக் குழுவும் அமைக்கப்பட்டன. இந்தக் குழு தீவிரவாத சித்தாந்தங் களை விதைக்கக்கூடிய சிந்தனை களுக்கு எதிராக இணைய, அச்சுத் தகவல் வழிகாட்டிகளை உருவாக்கி வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!