‘கடந்த ஆண்டைப் போன்ற புகைமூட்டத்திற்கு வாய்ப்பில்லை’

சிங்கப்பூரையும் இந்த வட்டாரத்தையும் கடந்த ஆண்டு பாதித்த புகைமூட்டம் போல, இவ்வாண்டு ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனீசியாவின் நிலமீட்பு அமைப்பு தலைவர் நஸீர் ஃபோயித் கூறியிருக்கிறார். "தீச்சம்பவங்கள் இருக்காது என்று நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. "ஆனால், புகைமூட்டத்தை ஏற்படுத்தும் தீச்சம்பவங்கள் கணிசமாகக் குறையும்," என்றார் அவர். அனைத்துலக விவகாரங்களுக் கான சிங்கப்பூர் கழகம் ஏற்பாடு செய்திருந்த நீடித்து நிலைத்திருக்கக்கூடிய உலக வளங்களுக் கான கருத்தரங்கின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

ரியாவ், கலிமந்தானின் சில பகுதிகள், ஜாம்பி உள்ளிட்ட இந்தோனீசியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கிய பொருட்களைக் கொண்ட 2.26 மில்லியன் ஹெக்டர் நிலங்களை மீட்பதை நோக்கமாகக் கொண்ட அமைப்பை இவ்வாண்டு ஜனவரி மாதம் நிறுவினார் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ.

கடந்த மாத இறுதியில் செங்காங் வட்டாரத்தில் சூழ்ந்திருந்த புகைமூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!