நிலப் போக்குவரத்து ஆணைய அமலாக்க அதிகாரி டான் ஹோக் குவானும் உபர் டாக்சி ஓட்டுநர் கோ கோக் லிங்கும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டதற்காகவும் துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டனர். 51 வயது டான், குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதேசமயம் சண்டையிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட கோ, துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாமல் வழக்கை எதிர்கொள்வதாகக் கூறினார்.
டானின் வழக்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. இலவச சட்ட உதவி வழங்கும் வழக்கறிஞரை நியமிக்க விரும் பிய உபர் ஓட்டுநர் கோவின் வழக்கில் மே 9ஆம் தேதி வழக்குக்கு முந்தைய கலந் துரையாடல் இடம்பெறும். இருவரும் தலா 5,000 வெள்ளி பிணையில் விடுவிக் கப்பட்டுள்ளனர்.