மெக்ரிட்சி நீர்த்தேக்கப் பூங்கா வழிகாட்டிப் பலகைகளில் தமிழ் இல்லை

அண்மையில், மெக்ரிட்சி நீர்த் தேக்கப் பூங்காவில் 'மெக்ரிட்சி ட்ரெய்ல்ஸ்' என்ற இடத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கே, நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரிய வழிகாட்டிப் பலகையைப் பார்த்தேன். அதில், ஆங்கிலம், மாண்டரின், மலாய் என நம் நாட்டின் மூன்று அதிகாரத்துவ மொழிகளில் பெயர் களும் மற்ற குறிப்புகளும் எழுதப் பட்டிருந்தன. ஆனால், தமிழ்மொழியில் மட் டும் எந்த வழிகாட்டிகளும் குறிப்பு களும் எழுதப்படவில்லை. ஏன்? இத்துடன் இணைக்கப்பட்டு உள்ள படத்தைக் காணவும். தயவு செய்து, இந்த விவரத் தைச் சம்பந்தப்பட்ட துறையினரின் கவனத்திற்குக் கொண்டு செல்லு மாறு அன்புடன் கேட்டுக் கொள் கிறேன்.

- சுலோக்‌ஷனா (ஜூரோங் ஈஸ்ட்)

வாசகர் சுலோக்‌ஷ்னாவின் கருத்துக்கு தேசிய பூங்காக் கழகம் அளித்திருக்கும் பதில்:

'மெக்ரிட்சி ட்ரெய்ல்ஸ்' பூங்காவில் உள்ள அறிவிப்புப் பலகைகள் குறித்து வாசகர் சுலோக்‌ஷனா தமிழ் முரசுக்கு அனுப்பிய கருத்துக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். சிங்கப்பூரில், மெக்ரிட்சி ட்ரெய்ல்ஸ் நீர்த்தேக்கப் பூங்கா உட்பட, எங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து பூங்காக்களிலும் உள்ள அறிவிப்புப் பலகைகளில் இவ்வாண்டு இறுதிக்குள் மாற்றங்களைக் கொண்டு வர திட்டம் உள்ளது.

- திரு வோங் டுவான் வா, இயக்குநர், பழமைப் பாதுகாப்பு, தேசிய பூங்காக் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!