‘முத்திரை’யை அகற்றும் ஓட்டத்தில் 3,000 பேர்

முன்னாள் கைதிகள், முன்னாள் போதைப் புழங்கிகள் என்ற முத்தி ரையைத் தாங்கியுள்ளவர்கள் சமுதாயத்தில் மீண்டும் இடம் பிடிக்க சிரமப்படுகின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்பட் டுள்ள முன்னாள் கைதி என்ற முத்திரையை அகற்றி, அவர்களை யும் சமுதாயத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் நேற்றுக் காலை முதன் முதலாக 'அன்லேபள்ட் ரன்' எனும் ஓட்ட நிகழ்ச்சி ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடைபெற்றது. 'த நியூ சரிஸ் மிஷன்' எனும் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஐந்து கிலோமீட்டர் ஓட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன் றத்தின் மேயர் திருவாட்டி டெனிஸ் புவா கலந்து கொண்டார்.

"இந்த முன்னாள் கைதிகள் இப்போது திருந்தி, வழக்கமான வாழ்க்கை வாழ்வதற்கு அரும்பாடு படுகின்றனர். அவர்களின் முயற் சியை மதித்து அவர்களையும் சமு தாயத்தில் இணைத்து கொள்வதன் மூலம் அவர்களின் பங்களிப்பும் நமக்குக் கிடைக்கிறது. மேலும் இது அவர்கள் புதிய வாழ்வு வாழ்வதற்கு இரண்டாம் வாய்ப்ப ளிக்கிறது," என்றார் 'த நியூ சரிஸ் மிஷன்' அமைப்பின் நிறுவ னரும் தலைமை இயக்குநருமான திரு டோன் வோங். எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டி லும் இந்த ஓட்டத்தில் சுமார் 3,000 பேர் பங்கேற்று சாதனை புரிந்தனர்.

முன்னாள் கைதிகள் பெரும்பாலோரின் உடலில் இருக்கும் பச்சை போல நேற்றைய ஓட்டத்தில் பங்கேற்ற அனைவரின் கை, கால்களில் செயற்கை பச்சை போடப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!