செயல்படா நிறுவனத்துக்காக வெளிநாட்டு ஊழியர்கள் 30 பேர்: சிங்கப்பூரருக்கு 27 மாதச் சிறை

லிம் கியன் பெங் என்ற 46 வயது சிங்கப்பூரருக்கு ஐந்து குற்றச் சாட்டுகளின் பெயரில் 27 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர், வெளிநாடு களைச் சேர்ந்த 30 ஊழியர்களுக்கு வேலை அனுமதிகளைப் பெற்றார். செயல்படாத ஒரு நிறுவனத்துக் காக அவர் அந்த ஊழியர்களுக்கு வேலை அனுமதி பெற்றதாக நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வேலை அனுமதி பெற்றதும் அந்த ஊழியர்களைச் சொந்தமாக வேலை தேடிக்கொள்ளும்படி லிம் விட்டுவிட்டார்.

லிம் மீது 30 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதர 25 குற்றச் சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. லிம் 2013 மே மாதத்திற்கும் 2013 நவம்பர் மாதத் திற்கும் இடையில் எம்என்எஃப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திற்காக 30 வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை அனுமதி பெற்றார் என்பது புலன்விசாரணை மூலம் தெரிய வந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!