சாலை விபத்து; சிங்கப்பூரர் குற்றவாளி

நியூசிலாந்தில் சென்ற நவம்பர் மாதம் நிகழ்ந்த ஒரு சாலை விபத் தில் மோட்டார்சைக்கிள் ஓட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அந்த விபத்தில் லியூ வெய் கியோங் என்ற சிங்கப்பூரர் சம்பந்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த சிங்கப்பூரர் கவனக் குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார்சைக்கிள் ஓட்டிக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டார் என்று நீதிமன்றம் முடிவுசெய்து இருப்பதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

அந்த 30 வயது சிங்கப்பூரர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி யதன் தொடர்பில் மூன்று குற்றச் சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஓப்புக்கொண்டார். அவருக்கு ஜூன் மாதம் 3ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். சிங்கப்பூரில் எரிசக்திச் சந்தை ஆணையத்தில் மூத்த பகுப்பாய் வாளராக பணியாற்றிவரும் லியூ, நியூசிலாந்தின் தென் தீவிற்கு விடுமுறையில் சென்றிருந்தார். அங்கு அவர் தனது வாகனத்தில் 120கிமீ வேகத்தில் சென்றதாகவும் அப்போது நிகழ்ந்த விபத்தில் 39 வயது கிராக் ஆலன் சேம்பர்ஸ் என்பவர் கொல்லப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!