மாற்றங்களுக்கான காலநேரம் பற்றி பேராசிரியர்கள் கருத்து

சிங்கப்பூரில் மக்களால் தேர்ந்தெ டுக்கப்படும் அதிபர் ஏற்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்ட ஆணையம் நேற்று தனது கருத்து அறிதலைத் தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் முறைக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் எப்போது அமலாக வேண்டும் என்பது நேற்று கருத்து அறிதலுக்கு வந்தது. அந்தக் கருத்து அறிதலில் பேசிய சிங்கப்பூர் நிர்வாகப் பல்க லைக் கழகச் சட்டத்துறைப் பேராசி ரியர் இயூஜின் டான், சிங்கப்பூரில் அடுத்த அதிபர் தேர்தல் 2017ல் நடக்க இருக்கிறது என்றும் அந் தத் தேர்தலுக்குப் பிறகுதான் மாற் றம் எதுவும் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இப்படிச் செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் தேர்தல் முறை அனாவசியமாக அரசியல் ஆக்கப்படாது என்று அவர் கருத்துக் கூறினார்.

அரசமைப்புச் சட்ட ஆணையம் 2016ன் தலைவர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் (நடு) இந்த ஆணையத்தின் பொதுக் கருத்து அறிதல் நிகழ்வில் பேசுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!