எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் மார்ச்சில் 15.6% குறைந்தன; ஓராண்டில் ஆக அதிகச் சரிவு

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் கடந்த மார்ச் மாதம் 15.6% இறக்கம் கண்டுள்ளன. இது, ஓராண்டில் இல்லாத அள வுக்கு ஆகக் குறைவாகும். மின்னணு, மின்னணு சாரா பொருட்களின் ஏற்றுமதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. 'ஐஇ சிங்கப்பூர்' நிறுவனம் வெளியிட்ட ஆகப் புதிய புள்ளி விவரங்கள் இதனைக் காட்டுகின்றன.

மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதிகள் 9.1% இறக்கம் கண்டன. இந்த ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 0.7% அதிகரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக் கது. மார்ச் மாத ஏற்றுமதி குறை வுக்கு முக்கியமான காரணம், கணினிகள், கணினிச்சில்லுகள், கணினிப் பகுதிப்பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிகள் மிகவும் குறைந்ததே ஆகும். கடந்த பிப்ரவரியில் 2.6% வளர்ச்சி கண்ட மின்னணுச் சாரா ஏற்றுமதிகள் மார்ச்சில் 18% குறைந்தன. கப்பல்கள், படகுகளின் பகுதிப் பொருட்கள், மருந்து, பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் ஆகியவை மிகவும் குறைவாக ஏற்றுமதி ஆனதே இதற்குக் காரணம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!