விரைவில் 300 வாடகை கார்கள்; எஸ்எம்ஆர்டி டாக்சிஸ் நிறுவனம் சேவையில் ஈடுபடுத்தும்

'எஸ்எம்ஆர்டி டாக்சிஸ்' நிறு வனம் 300 கார்களை சேவையில் ஈடுபடுத்த இருக்கிறது. அந்த நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டிரான்ஸ்போர்ட்ஸ்டேஷன் என்ற புதிய நிறுவனத்தை அமைத்து இருக்கிறது. இதன்மூலம் அது தனியார் வாடகை கார் தொழில் துறையில் ஈடுபடுகிறது. எஸ்எம்ஆர்டி டாக்சிஸ் நிறு வனத்திற்கு முற்றிலும் சொந்த மான துணைநிறுவனமான இது அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக புத்தம்புதிய டொயோட்டா ஆல்டிஸ் கார் களைச் சாலையில் ஓடவிட இருக்கிறது. "தனியார் வாடகை கார் தொழில் துறையில் சரியான நேரத்தில் நாங்கள் ஈடுபடு கிறோம்," என்று எஸ்எம்ஆர்டி சாலைப் பிரிவின் நிர்வாக இயக் குநர் பென்னி லிம் தெரிவித்தார். ஸ்ட்ரெய்ட்ஸ் நிறுவனம், 'கிராப்' (Grab) என்ற கார்களை முன்பதிவு செய்யும் நிறுவனத் துடன் பங்காளித்துவ உறவிலும் ஈடுபடுகிறது. 'கிராப்' மூலம் பயணிகள் தங்களின் செல்பேசிச் செயலி யைப் பயன்படுத்தி கார்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!