2000ல் கொலை; 2016ல் தண்டனை

சிங்கப்பூரில் கடந்த 2000, மே மாதம், 36 வயது ஆடவர் ஒருவரைக் கொலை செய்ததற்காக ஸி சீ கியோங் என்ற ஆசாமிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் லியோங் ஃபுக் வெங் என்ற ஆடவருக்கு மரணம் விளைவித்ததாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஸி சீ கியோங் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த 2000த்தாவது ஆண்டு மே 18ஆம் தேதி, ஸி தாய்லாந்துக்குத் தப்பிச்சென்றுவிட்டார். அதே ஆண்டில் அவர் கம்போடியாவில் கைதானார். போதைப்பொருளைக் கடத்தியதற்காக அங்கு அவருக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. என்றாலும் 2013 நவம்பரில் விடுதலையான ஸி சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப் பட்டார். இந்த விவகாரம் தொடர்பில் ஸியின் கூட்டாளி களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும் ஓங், லிம் என்ற இருவர் மட்டும் இன்னமும் பிடிபடவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!