போதைப்பொருள் இல்லா சிங்கப்பூர்: அமைச்சர் உறுதி

போதைப்பொருளுக்கு எதிரான தனது கொள்கைகளை ஒரு போதும் சிங்கப்பூர் தளர்த்திக் கொள்ளாது என்று சட்ட, உள் துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். தனது அணுகுமுறையைக் காட்டிலும் மற்றோர் அணுகு முறை சிறந்த பலன்களை அளிப்பதாக நிரூபிக்கப்படும் வரை சிங்கப்பூர் இப்போதைய அணுகுமுறையைத் தொடரும் என்று திரு சண்முகம் உறுதியாகக் கூறினார். ஐக்கிய நாடுகள் நிறுவன பொது மன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

போதைப்பொருட்களுக்கு எதிரான அனைத்துலகப் போர் தான் பெரும்பாலான வன்முறை களுக்குக் காரணம் என்றும் அதனால் சட்ட அமலாக்கத்தை வலியுறுத்தாத 'மனிதாபிமானத் தீர்வு' காணப்பட வேண்டும் என்றும் மெக்சிகோ, குவாட்ட மாலா, கொலம்பியா போன்ற நாடுகள் வாதிட்டதைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் இடம்பெற்றது. "சிங்கப்பூரின் போதைப் பொருள் எதிர்ப்புக் கொள்கை கள் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளன. வாக்கு வன்மையுடன் பேசுவது வேறு. பத்து வயதுக் குழந்தையைத் தனியாகப் பேருந்தில் அனுப்பி விட்டு நிம்மதியாக இருப்பது போன்ற பாதுகாப்பை அனுபவிப்பது வேறு," என்றார் அமைச்சர் சண்முகம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!