பாலியல் குற்றங்களைத் தடுக்க முனைப்பு காட்டும் அதிகாரி ஐஸ்வரியா

திமத்தி டேவிட்

தமது படைக் குழுவிலேயே முதல் பத்து இடங்களுக்குள் வந்து நேற்று முன்தினம் போலிஸ் தேசிய சேவையாளர் அதிகாரியாகப் பட்டம் பெற்றார் ஏஎஸ்பி சு.ஐஸ்வரியா, 23. ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரியில் பயின்றபோது போலிஸ் துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் போலிஸ் படை ஆட் சேர்ப்பு உரையின்போது அவர் விண்ணப்பித்தார். இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் போலிஸ் படையின் உபகாரச் சம்பளம் மூலம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் உயிர் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார் ஐஸ்வரியா. அதன் பிறகு சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் போலிஸ் படைப் பயிற்சியைத் தொடங்கினார்.

தமது எதிர்பாராத முடிவால் குடும்பத்தினர், நண்பர்கள் அனை வரும் ஆச்சரியப்பட்டாலும் மூன்று மகள்களுள் மூத்தவரான அவருக்கு சிங்கப்பூர் போலிஸ் படையில் சேர்வதற்கு அனைவரும் ஆதரவு அளித்ததாக தமிழ் முரசிடம் கூறினார் ஐஸ்வரியா.

பிடோக் வட்டார போலிஸ் தலைமையகத்தில் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றவிருக்கும் ஐஸ்வரியா. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!