செயலில் இறங்க விவியன் வலியுறுத்து

பருவநிலை பற்றிய மிக முக்கியமான பாரிஸ் உடன்பாட்டில் சிங் கப்பூர் உள்ளிட்ட 175 நாடுகள் கையெழுத்திட்டு இருக்கின்றன. உலக பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் அந்த உடன் பாட்டை முறையாக ஏற்றுக்கொள்ள நாடுகள் தங்கள் நாடாளுமன்றத் தில் வாக்கெடுப்புகளை நடத்த வேண்டியிருக்கும். உலகில் பசுமை இல்ல வாயுக் களை அதிகம் வெளியாக்கும் நாடுகளான அமெரிக்காவும் சீனா வும் அந்த உடன்பாட்டை இந்த ஆண்டின் இறுதிவாக்கில் கைக் கொள்ளப்போவதாக உறுதி கூறி யிருக்கின்றன. பாரிஸ் உடன்பாடு உலக நாடு கள், உலக வெப்பநிலை அதி கரிப்பை 2 டிகிரி செல்சியஸ் வரைக்கும் குறைக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது.

நாடுகள் வெறும் வார்த்தை யோடு நின்றுவிடாமல் சொல்லைச் செயலாக்க பாடுபடவேண்டும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பால கிருஷ்ணன் வலியுறுத்தினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா தலைமையகத்தில் பாரிஸ் உடன்பாட்டில் டாக்டர் விவியன் கையெழுத்திட்டார். "உலகில் வரும் 2020ஆம் ஆண்டுக்கு அப்பால் நாம் தெரி வித்துள்ள கடப்பாடுகளுக்கு நல்ல அடிப்படையை உருவாக்க 2020ஆம் ஆண்டுக்கு முன்பே திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்," என்று டாக்டர் விவியன் அங்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் சூரிய சக்திப் பயனீட்டை அதிகரித்து அதன் மூலம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை கள் இடம்பெறும். சிங்கப்பூரில் மேற்கொள்ளப் படும் எரிசக்திச் சிக்கன முயற்சி களுக்கு இது உறுதுணையாக இருக்கும். இவற்றின் மூலம் சிங்கப்பூர் சுற்றுச்சூழலுக்குப் பாதகமான வாயுக்கள் வெளியேற்றத்தை 36 விழுக்காடாகக் குறைக்கும் என்று டாக்டர் விவியன் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!