இந்தோனீசியச் செய்திக்கு சிங்கப்பூர் மறுப்பு

ஆட்களைத் திருப்பி அனுப்பும் உடன்பாட்டை இந்தோனீசியா வுடன் செய்துகொள்ள சிங்கப்பூர் ஒருபோதும் விரும்பவில்லை என்று அந்த நாட்டின் துணை அதிபர் ஜுசெப் கல்லா தெரிவித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி சரியானதல்ல என்றும் அது தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. 'நாட்டைவிட்டு சட்டவிரோத மாக வெளியேறி இருக்கும் குற்ற வாளிகளில் மேலும் பலரை பிடிக்க சிங்கப்பூருடன் கூடிய ஆட்களைத் திருப்பி அனுப்பும் உடன்பாடு உதவும்' என்ற தலைப்பில் ஏப்ரல் 22ல் வெளியான அண்டாரா செய்தி பற்றி கருத்துத் தெரிவித்த சிங்கப்பூரின் வெளியுறவு அமைச் சின் பேச்சாளர் இவ்வாறு கூறினார்.

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் பாலி நகரில் 2007ல் குற்றவாளி களைத் திருப்பி அனுப்புவது, தற் காப்பு ஒத்துழைப்பு ஆகிய இரண் டையும் உள்ளடக்கிய உடன்பாட்டில் கையெழுத்திட்டன. அந்த இணக்கம் அப்போது இந்தோனீசியாவின் அதிபராக இருந்த யுதயோனோ, சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் இருவரின் முன்னிலையில் கையெழுத்தானது. அப்போது இதே ஜுசெப் கல்லா தான் இந்தோனீசியாவின் துணை அதிபராக இருந்தார் என்று சிங்கப் பூரின் அமைச்சு பேச்சாளர் குறிப் பிட்டார். அந்த இரண்டு உடன்பாடு களுக்கும் இந்தோனீசிய நாடாளு மன்றம் ஒப்புதல் அளிக்கவேண்டிய நிலை இருக்கிறது.

இந்தோனீசியா அந்த உடன் பாடுகளைக் கைக்கொள்ள தயார் என்றால் சிங்கப்பூரும் தயார் என்று பேச்சாளர் தெரிவித்தார். இருந்தாலும் சட்ட அமலாக்கத் திலும் குற்றவியல் விவகாரங் களைக் கையாளுவதிலும் சிங்கப் பூரும் இந்தோனீசியாவும் தொடர்ந்து நல்ல இருதரப்பு ஒத் துழைப்பை அனுபவித்து வருவதாக சிங்கப்பூர் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!