முரளி: மேம்பாட்டில் கவனம் டாக்டர் சீ: பிரசாரத்தில் கவனம்

முஹம்மது ஃபைரோஸ்

மே 7ஆம் தேதியன்று நடைபெற வுள்ள இடைத்தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியிலுள்ள அக்கம் பக்க வட்டாரத்தில் $1.9 மில்லியன் மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர் திரு முரளி தரன் பிள்ளை அறிவித்துள்ளார். பல தலைமுறையினர் பயன் படுத்தக் கூடிய பூங்கா, கூரையுடன் கூடிய நடைபாதை என அக்கம் பக்க புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ் பல மேம்பாட்டுத் திட்டங்கள் புக் கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 4, புளோக் 140 முதல் 149 வரை யிலான பேட்டைகளில் இடம்பெறும்.

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் உள்ள மசெகவின் புக்கிட் பாத்தோக் கிளைக்கு அருகே இடம்பெற்ற கண்காட்சி யின்போது நேற்றுக் காலை செய்தி யாளர்களிடம் பேசிய அவர், அக் கம்பக்க வட்டாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றி குடி யிருப்பாளர்களிடம் கடந்த ஆண்டு இறுதியில் கருத்து சேகரிக்கப் பட்டதாகக் கூறினார். மசெக நிர்வகிக்கும் ஜூரோங்= கிளமெண்டி நகர மன்றம் தற்போது புக்கிட் பாத்தோக் வட்டாரத்தைப் பராமரிக்கின்றது. இத்திட்டங்கள் நன்கு நடைமுறைப்படுத்தப்படுவ தைத் தாம் உறுதிசெய்யப் போவ தாக தெரிவித்த திரு முரளி, தாம் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே இவற்றைச் செயல்படுத்த முடியும் என்றார்.

புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி சார்பாகப் போட்டியிடும் திரு முரளிதரன் பிள்ளையும் (இடது படம், நடுவில்), சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அதன் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவானும் (வலது படம், நடுவில்) நேற்று அத்தொகுதி மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!