இளையர்களிடத்தில் ஆரோக்கியவாழ்வு: எட்டு வார இணைய ஆலோசனை

இளையர்களிடத்தில் ஆரோக்கிய வாழ்க்கைமுறையை எவ்வாறு பிரபலப்படுத்தலாம் என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிய எட்டு வார இணைய ஆலோசனையை 'நர்ச்சர் எஸ்ஜி' பணிக் குழு சார்பில் நேற்று தொடங்கி வைத்தார் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின். இந்த இணைய ஆலோசனை இந்தப் பணிக்குழுவில் மக்களை ஈடுபடுத்தும் ஒட்டுமொத்த செயல்பாட்டின் ஒரு பகுதி என்றும் பெற்றோர்கள், இதர பங்களிப்பாளர்கள் ஆகி யோருடன் நேரடிக் கலந்துரையாடலும் அவற்றில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் லாம் பின் மின்னும் கல்வி துணைஅமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரியும் இணைந்து தலைமையேற்கும் 'நர்ச்சர் எஸ்ஜி' பணிக் குழு பற்றி கடந்த மாதம் அறிவிக்கப் பட்டது. சிங்கப்பூர் இளையர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.

ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மையோபியா எனும் கண் பார்வை குறைபாடு, மனநலம், பல் சுகாதாரம் ஆகியவற்றில் பணிக் குழு கவனம் செலுத்தும். ஆங்கர்வேல் சமூக மன்றத்தில் நேற்று 35 பேர் பங்கேற்ற முதலாவது நேரடிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் லாம், "சுகாதார மேம்பாட்டு வாரியம் கவனித்தக்க அம்சங்கள் என்று அடையாளம் கண்டிருக்கும் அம்சங்களில் எங்கள் குழு தீவிர கவனம் செலுத்தும். இளையர்களிடத்தில் அதிகம் காணப்படும் உடற்பருமன் பிரச்சினையும் அவற்றில் ஒன்று. "அதிக உடல் அசைவு இல்லாத வாழ்க்கை காரணமாகத் தான் இளையர்கள் உடற்பருமன் பிரச்சினைக்கு ஆளாகின் றனர். பள்ளிகளின் உணவுக்கூடங்களில் விற்கப்படும் உணவு வகைகள் உட்பட தீவிரமாக ஆலோசிக்கப்படும்," என்று டாக்டர் லாம் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!