கிரேஸ் ஃபூ: உன்னதமான இன, சமய நல்லிணக்கமே சிங்கப்பூரின் சொத்து

உலக அரங்கில் நம்மைத் தனித் துவமிக்க நாடாக எடுத்துரைப்பது நாம் அரும்பாடுபட்டு கட்டிக்காத்து வரும் இன, சமய நல்லிணக்கம் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சிங்கப்பூரின் பொன்விழா கொண்டாட்டங்களின் போது சிங்கப்பூரர்களின் ஒற்றுமை யும் இன, சமய நல்லிணக்கமும் மேலும் மிளிர்ந்தன என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார். சிங்கப்பூர் தாவோயிசச் சங்கத் தின் ஏற்பாட்டில் நேற்று கோவன் ஹப்பில் நடைபெற்ற 9வது நல்லி ணக்க விளையாட்டுகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஃபூ, "சிங்கப்பூரில் ஒருவர் தனது சம யத்தை எவ்விதத் தடையுமின்றி பின்பற்றலாம். ஆனால், அதே சம யத்தில் ஒருவர் மற்றவரது சமயக் கோட்பாடுகளை மதித்து, அதற் கேற்றாற்போல் விட்டுக் கொடுத்து நல்ல அண்டை வீட்டாராக, நல்ல அக்கம்பக்கத்தாராக வாழ்வதே இந்நாட்டின் தனித்துவப் பண்பு," என்று சொன்னார்.

இவ்வாண்டு நல்லிணக்க விளையாட்டுகளை ஏற்று நடத்திய சிங்கப்பூர் தவோயிசச் சங்க அதிகாரிகளிடமிருந்து (இடது) அதற்குரிய கொடிச் சின்னத்தைப் பெற்று அதை அடுத்த ஆண்டு இந்த விளையாட்டுகளை ஏற்று நடத்தவிருக்கும் முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்ற அதிகாரிகளிடம் (வலது) ஒப்படைக்கிறார் கலாசார, சமூக, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்). படம்: முயிஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!