மருமகளைக் கொன்ற 82 வயது ஆடவருக்கு எட்டு ஆண்டு சிறை

தமது 54 வயது மருகளை அவரது தெம்பனிஸ் வீட்டில் கொலை செய்த மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 82 வயது ஆடவருக்கு எட்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சார் சின் ஃபா (படம்) எனும் பெயருடைய அந்த ஆடவர் திருவாட்டி ஓங் குவாட் லெங் எனும் தமது மருமகளைக் கத்தியால் தொடர்ச்சியாகக் குத்தியதை ஒப்புக் கொண்டார். இது நோக்கமில்லாமல் மரணம் விளைவித்ததாக வகைப்படுத்தப்பட்டது.

திருவாட்டி ஓங் திரு சாரின் மூத்த மகனை 2014 ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். தீர்ப்பை வழங்கிய நீதிபதி வூ பி லி, "இது ஒரு மிகக் கடுமையான குற்றம். இதற்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். ஆனால், குற்றவாளியின் மூத்த வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு எட்டு ஆண்டு சிறை விதிக்கிறேன்," என்றார். தமது மருமகள் எப்போதும் தம்மிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்கிறார், தம்மிடம் எப்போதும் எரிச்சலாகப் பேசுகிறார் என்று தமது பிள்ளைகளிடம் தெரிவித்து வந்தார் மனநோயால் பாதிக்கப்பட்ட திரு சார். இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட மருமகளைக் கொன்றே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்த திரு சார், 2014 ஆகஸ்ட் 21ஆம் தேதி வீட்டில் மருமகள் தனியாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவரைத் தாக்கி சரமாரியாகக் கத்தியால் குத்தினார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!