சுடச் சுடச் செய்திகள்

இடைத்தேர்தல்: பிரசார விதிமுறைகள்

மே மாதம் 7ஆம் தேதி நடை பெறவுள்ள புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் தொடர்பான விதி முறைகளை போலிசார் நேற்று அறிவித்தனர். இதன்படி, தேர்தல் கூட்டங் களை உள்ளரங்குகளிலும் வெளிப் புற இடங்களிலும் வியாழக் கிழமையிலிருந்து மே மாதம் 5ஆம் தேதிவரை காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை நடத்தலாம். அத்துடன், ஒலிபெருக்கிகள் பொருத்திய வாகனங்களை நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 முதல் இரவு 10.00 வரையிலும் வியாழக் கிழமை முதல் மே 5ஆம் தேதி வரை காலை 7.00 மணி முதல் இரவு 10.00 வரையிலும் பயன் படுத்தலாம் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். வெளிப்புறத் தேர்தல் கூட்டங் களை போலிஸ் அனுமதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங் களிலேயே நடத்தலாம் என்றும் மதிய உணவுக் கூட்ட இடங்கள் உட்பட கூட்டங்கள் நடத்தக்கூடிய இடங்களின் பட்டியல் நாளை வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின் வெளியிடப்படும் என்றும் போலிசார் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon