கொத்தடிமைகளான அதிமுக வேட்பாளர்கள்: ஸ்டாலின் விமர்சனம்

நெல்லை: மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். களியக்காவிளையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக வேட்பாள ர்களை முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கொத்தடிமைகளைப் போல் நடத்துவதாக விமர்சித்தார். "சொல்லாததையும் செய்துள்ளோம் என்கிறார் ஜெயலலிதா. ஏராளமான மதுக் கடைகளை சொல்லாமல் திறந்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்து விட்டுள்ளார் என்று வேண்டுமானால் சொல்லலாம்," என்றார் ஸ்டாலின். திமுக இரண்டாவது இடத்துக்கு கூட வராது என திருச்சியில் ஜெயலலிதா கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தலின் முடிவில் அதிமுகவால் மூன்றாவது இடத்துக்கு கூட வராது என்பதே உண்மை என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!