புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மசெக

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். புக்கிட் பாத்தோக் தொகுதியில் வசிக்கும் மூத்தோர் நலனில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று திரு முரளி கூறினார். திரு முரளி முன்வைத்த திட்டங்களில் சுகாதாரப் பரா மரிப்புக் கூட்டுறவு சங்கமும் ஒன்று. மருத்துவர்களும் தாதி யரும் இந்தக் கூட்டுறவு சங்கத் தைச் சேர்ந்து நடத்துவர் என்று திரு முரளி தெரிவித்தார்.

இக்கூட் டுறவுச் சங்கம் பால், ஊட்டச் சத்து போன்ற பொருட்களை வாங்க குடும்பங்களுக்கு ஏற்படும் செலவினங்களைக் குறைக்க உதவும் என்றார் திரு முரளி. இத்தகைய செலவினங்களைச் சமாளிக்க குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவும் வகை யில் நிதியுதவிகள் ஏற்கெனவே நடப்பில் இருப்பதைச் சுட்டிய திரு முரளி, புதிய திட்டம் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு உதவும் என்று தெரிவித்தார். கு டி யி ரு ப் பா ள ர் க ளி டை யே மருத்துவ விழிப்புணர்வைக் கூட்டுறவுச் சங்கம் உயர்த்தும் என்று திரு முரளி குறிப்பிட்டார். உதாரணத்துக்கு, எலும்புருக்கி நோயால் பாதிப்புக்கு உள்ளான வர்கள் அதனால் முடங்கிக் கிடக்காமல் இருப்பது எப்படி என்பது குறித்து கூட்டுறவுச் சங்கம் வாயிலாகக் கற்றுக் கொள்ளலாம் என்றார் திரு முரளி. புதிய திட்டங்களின்படி தனி யாக வசிக்கும் மூத்தோரின் நலனில் அதிகக் கவனம் செலுத் தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக 'அவசரகால பொத்தான் திட்டம்' ஒன்றை அறிமுகம் செய்ய விரும்புவதாக திரு முரளி கூறினார்.

தொகுதிக்கான திட்டங்களை வெளியிடும் திரு முரளிதரன் பிள்ளையுடன் (வலது), துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், புக்கிட் பாத்தோக் மசெக கிளைச் செயலாளர் லியாவ் பூன் சுவீ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!