இணையப் பாதுகாப்புப் பயிலகம் தொடக்கம்

சிங்கப்பூரின் தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல், நேற்று இணையப் பாதுகாப்புப் பயிலகத்தைத் தொடங்கியது. அந்தப் பயிலகம் அதிநவீன இணைய உலகமும் கல்வி நிலையம் ஒன்றும் கலந்த கலவையாக இருக்கிறது. அந்தப் பயிலகம் இந்த வட் டாரத்தில் இத்தகைய முதலாவது பயிலகம் ஆகும். சிக்கலான இணைய மிரட்டல்களைக் கை யாளுவது எப்படி என்பதைப் பற்றி நிறுவனங்களுக்கு அந்தப் பயிலகம் பயிற்சி அளிக்கும். சோதனைகளிலும் ஈடுபடும். சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் 10,000 சதுர அடி பரப்புள்ள நிரந்தர இடத்தில் அமைந்துள்ள அந் தப் பயிலகம், இணையத் தேர்ச்சி மேம்பாடு, போதனைச் செயல்திட் டங்களை வழங்குகிறது.

அந்தத் திட்டங்கள் நிறு வனங்களின் நிர்வாக சபைகள், நிர்வாக தொழில்நுட்ப நடவடிக்கைகள், ஊழியர்கள் ஆகியோரின் பல்வேறு விதமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தோதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிர்வாக சபை நிலையிலான பேராளர்களுக்கு இணைய மிரட்டல் புரிந்துணர்வு, ஆபத்துகளைச் சமாளிக்கும் விதம், தொழில்களைத் தொடர்ந்து நடத்துவதற் கான திட்டம், நெருக்கடிகால தகவல் தொடர்பு ஆகிய துறை களில் பயிற்சி அளிக்கப்படும். அவர்களின் தேர்ச்சிகளைக் கூர்தீட்டும் வகையில், இணைய நடவடிக்கைகள் குழுவுக்குத் தற் காப்பு, செயல்படும் ஆற்றல் ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கப்படும். சிங்கப்பூரில் நிறுவனங்களுடன் கூடிய ஈடுபாட்டின் அடிப்படையில் பார்க்கையில், 85%க்கும் அதிக நிறுவனங்களிடம் இணையச் செயல்திட்டங்கள் எதுவுமில்லை என்பது தெரிய வருகிறது. அத்தகையத் திட்டங்களைப் பரிசோதித்துப் பார்த்து அவற்றின் ஆற்றல்களைப் பெருக்கும் பயிற்சி களை நடத்துவதற்கான வாய்ப்பும் அந்த நிறுவனங்களுக்கு இல்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!