பய­­­ணி­­­யின் பாதத்­­­தில் பேருந்தை ஏற்­­­றி­­­ய­­­வ­­­ருக்கு ஒரு வாரச் சிறை

திரு­­­வாட்டி டிங் லாங் கின், 88, பேருந்­­­தில் இருந்து இறங்­­­கு­­­வதற்கு முன்­­­ன­­­தா­­­கவே, பின்­­­பக்­­­கக் கதவு திறந்­­­தி­­­ருந்த நிலையில் ஓட்­­­டு­­­நர் பேருந்தைக் கிளப்­­­பி­­­ய­­­தால் அந்தப் பயணி சாலையில் விழுந்­­­துள்­­­ளார். அப்போது பேருந்­­­தின் இடது பக்க பின் சக்­­­க­­­ரம் அவரது காலில் ஏறி­­­யுள்­­­ளது. அதனால் அவரது காலை வெட்ட வேண்டிய நிலை ஏற்­­­பட்­­­டது. கவ­­­னக்­­­குறை­­­வான செய­­­லினால் காயம் ஏற்­­­படுத்­­­திய குற்­­­றத்தை எஸ்­­­எம்­­­ஆர்டி பேருந்து ஓட்­­­டு­­­நர் 53 வயது லாவ் பிக் சோங் நேற்று ஒப்­­­புக்­­­கொண்டார். அவ­­­ருக்கு ஒரு வார சிறைத் தண்டனை விதிக்­­­கப்­­­பட்­­­டது.

ஏப்ரல் 3ஆம் தேதி பிற்­­­ப­­­கல் 1 மணி அளவில் 913E பேருந்­­­தில் பயணம் செய்த திரு­­­வாட்டி டிங், உட்­­­லண்ட்ஸ் சென்டர் ரோட்டில் தாம் இறங்­­­க வேண்டிய இடம் வந்த­­­போது பேருந்தை நிறுத்­­­தும் மணியை அழுத்­­­தினார். அவர் மெதுவாக நடந்து இறங்­­­கும்­­­வ­­­ழியை அடை­­­வதற்­­­குள் ஓட்­­­டு­­­நர் இறங்­­­கும் வழியின் கதவை மூடி­­­விட்­­­டார். அதைக்­­­க­­­வ­­­னித்த பயணி ஒருவர் மீண்டும் நிறுத்­­­தும் மணியை அழுத்த, ஓட்­­­டு­­­நர் கதவை மீண்டும் திறந்தார். ஆனால் திரு­­­வாட்டி டிங் கடைசி படியில் இறங்­­­கிக் கொண்­­­டி­­­ருக்­­­கும்­­­போதே, கதவை மூடாமல் ஓட்­­­டு­­­நர் வண்டியை எடுத்­­­து­­­வி­­­ட­­­டார். பயணி இறங்கி விட்டாரா என்பதை அவர் உறு­­­திப்­­­படுத்­­­தவில்லை.

கீழே விழுந்த திரு­­­வாட்டி டிங்கின் காலின் மீது பேருந்­­­தின் சக்­­­க­­­ரம் ஏறி­­­ய­­­தும் பய­­­ணி­­­கள் சத்­­­தம்­­­போ­­­டவே லாவ் உட­­­ன­­­டி­­­யா­­­கப் பேருந்தை நிறுத்­­­தினார். திரு­­­வாட்­­­டி டிங்கின் இடது கால் சக்­­­க­­­ரத்­­­துக்கு அடியில் மாட்டிக்கொண்டது. ஓட்­­­டு­­­நர் பேருந்தை பின்னால் செலுத்தி அவரது காலை விடு­­­வித்­­­தார். அவர் கூ தெக் புவாட் மருத்­­­து­­­வ­­­மனைக்­­­குக் கொண்டு செல்­­­லப்­­­பட்­­­டார். காயம் கடுமை­­­யாக இருந்த­­­தால் அன்றே அவரது இட­­­து­­­கால் அகற்­­­றப்­­­பட்­­­டது. ஏழு வாரங்களுக்கு அவர் மருத்­­­து­­­வ­­­மனை­­­யில் சிகிச்சை பெற்றார். திரு­­­வாட்டி டிங்­­­கிற்கு 5 பிள்ளை­­­கள், 2 பேரப்­­­பிள்ளை­­­கள் உள்­­­ள­­­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!