ஊழியர் மரணம்: நிறு­­­­­­­வ­­­­­­­னத்­­­­­­­துக்கு $150,000 அப­­­­­­­ரா­­­­­­­தம்

குளிர்­­­­­­­சா­­­­­­­த­­­­­­­னப் பெட்டி வெடித்­­­­­­­த­­­­­­­தால் மரணம் அடைந்த 22 வயது பங்­­­­­­­ளா­­­­­­­தேஷ் ஊழி­­­­­­­ய­­­­­­­ரின் மரணம் தொடர்­­­­­­­பாக சிங் வா எண்டர்­­­­­­­பிரைஸ் நிறு­­­­­­­வ­­­­­­­னத்­­­­­­­துக்கு $150,000 அப­­­­­­­ரா­­­­­­­தம் விதிக்­­­­­­­கப்­­­­­­­பட்­­­­­­­டுள்­­­ளது. ஊழி­­­­­­­ய­­­­­­­ரின் பாது­­­­­­­காப்பை உறு­­­­­­­தி­­­­­­­செய்ய போதிய நட­­­­­­­வ­­­­­­­டிக்கை­­­­­­­களை எடுக்­­­­­­­கா­­­­­­­த­­­­­­­தன் மூலம் வேலையிட பாது காப்பு, சுகாதார சட்­­­­­­­டத்தை மீறிய குற்­­­­­­­றத்தை நிறு­­­­­­­வ­­­­­­­னம் ஒப்­­­­­­­புக்­­­­­­­கொண்டது. திரு அப்துல் ஜெய்னால் சிக்­­­­­­­த­­­­­­­ரும் மேலும் இரு ஊழி­­­­­­­யர்­­­­­­­களும் 2012, ஆகஸ்ட் 15ஆம் தேதி அங் மோ கியோ ஸ்திரீட் 2ல் உள்ள டொ‌ஷிபா டெக் நிறு­­­­­­­வ­­­­­­­னத்­­­­­­­தின் குளிர்­­­­­­­சா­­­­­­­தன இயந்­­­­­­­தி­­­­­­­ரத்தைச் சரி­­­­­­­செய்­­­­­­­யச் சென்ற­­­­­­­னர். ஒருவர் இயந்­­­­­­­தி­­­­­­­ரத்­­­­­­­தின் குளி­­­­­­­ரூட்­­­­­­­டிச் சுருளை­­­­­­­யி­­­­­­­லி­­­­­­­ருந்த ரசா­­­­­­­ய­­­­­­­னத்தைக் கழு­­­­­­­வினார். மற்­­­­­­­ற­­­­­­­வர் காற்­­­­­­­றழுத்­­­­­­­தி­­­­­­­களில் இருந்த எளிதில் தீப்­­­­­­­பற்­­­­­­­றக்­­­­­­­கூ­­­­­­­டிய ஹைட்­­­­­­­ரோ­­­­­­­கார்­­­­­­­பன் வாயுவை சன்னல் வழியாக வெளி­­­­­­­யேற்­­­­­­­றினார்.

பின்னர் அங்கு தரையில் தேங்கிய கழி­­­­­­­வு­­­­­­­நீரைச் சுத்தம் செய்ய திரு சிக்தர் வாக்யூம் கிளீ­­­­­­­னரைச் செயல்­­­­­­­படுத்த முனைந்த­­­­­­­போது, திடீரென வெடிப்பு ஏற்­­­­­­­பட்­­­­­­­டது. திறந்­­­­­­­தி­­­­­­­ருந்த சன்னல் வழியாக இரு ஊழி­­­­­­­யர்­­­­­­­கள் தப்­­­­­­­பி­­­­­­­னர். திரு சிக்தர் வாசல் கதவு வழி­­­­­­­யா­­­­­­­கத் தப்­­­­­­­பினார். மூவரும் தீக்­­­­­­­கா­­­­­­­யங்களுக்­­­­­­­காக மருத்­­­­­­­து­­­­­­­வ­­­­­­­மனை­­­­­­­யில் சேர்க்­­­­­­­கப்­­­­­­­பட்­­­­­­­ட­­­­­­­னர். கடுமை­­­­­­­யான தீக்­­­­­­­கா­­­­­­­யம், நிமோ­­­­­­­னி­­­­­­­யா­­­­­­­வால் நான்கு நாட்கள் கழித்து திரு சிக்தர் உயி­­­­­­­ரி­­­­­­­ழந்தார். ஹைட்­­­­­­­ரோ­­­­­­­கார்­­­­­­­பன் திடமான வாயு என்­­­­­­­ப­­­­­­­தால், அது தரையில் படி­­­­­­­யக்­­­­­­­கூ­­­­­­­டி­­­­­­­யது என்றும் அதனை வெளி­­­­­­­யேற்ற கூடு­­­­­­­த­­­­­­­லான காற்­­­­­­­றோட்ட வசதி செய்­­­­­­­யப்­­­­­­­பட்­­­­­­­டி­­­­­­­ருக்க வேண்டும் என்றும் மர­­­­­­­ண­­­­­­­ வி­­­­­­­சா­­­­­­­ரணை அதிகாரி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!