புக்கிட் பாத்தோக்கின் உத்தேச மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து வேட்பாளர்கள் விவாதம்

புக்கிட் பாத்தோக் இடைத் தேர் தலில் போட்டியிடும் இரு வேட் பாளர்களுக்கு இடையில் மேம் பாட்டு வாக்குறுதிகள் பற்றிய விவாதம் மூண்டுள்ளது. புக்கிட் பாத்தோக் அக்கம்பக்கத்திற்கான புதுப்பிப்புத் திட்டம் இந்த விவாதத்தைத் தூண்டியது. சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான், மக்கள் செயல் கட்சி வேட்பாளர் முரளி பிள்ளை பரிந்துரைத்த மேம்பாட்டுத் திட்டத் தைக் குறை கூறினார். ‚தேர்தல் வரும்போதெல்லாம் காணப்படும் நடவடிக்கை இது என்று டாக்டர் சீ குறிப்பிட்டார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திரு முரளி, தனது பரிந் துரை அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ் இடம்பெறுவதாக வும், அது நடுநிலையான திட்டம் என்றும் கூறினார். "ஆனால், புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர் கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார் களோ அவரே நகர மன்றத்தை வழிநடத்தித் திட்டத்தை அமலாக்க முடியும்," என்றார் அவர்.

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 4 அக்கம்பக்கத்தில் கூரையுள்ள நடைபாதைகள், சாய்வுப் பாதைகள், மெதுவோட்டத் தடம், பூங்கா ஆகியவற்றைக் கட்டுவதற்கான $1.9 மில்லியன் திட்டத்தை 48 வயது திரு முரளி ஏப்ரல் 24ம் தேதி அறிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!