மெதுவான சம்பள உயர்வு; வேலையின்மை அதிகரிப்பு

உலகப் பொரு­ளி­ய­லில் வளர்ச்சி மந்த­மாக இருப்­ப­தால் சிங்கப்­பூ­ரின் பொரு­ளி­யல் இந்த ஆண்டில் மேலும் கவலை­ய­ளிப்­ப­தாக அமையும் என்று சிங்கப்­பூர் நாணய ஆணையம் தெரி­வித்­துள்­ளது. ஆண்­டுக்கு இருமுறை வெளி­யி­டப்­படும் பொரு­ளி­யல் ஆய்வுக் கண்­ணோட்­டத்தை நேற்று வெளி­யிட்ட ஆணையம், வர்த்­தக வளர்ச்சி குறித்த எதிர்­மறை­யான எண்ணம் மேலும் பர­வ­லாகி உள்­ள­தா­கத் தெரி­வித்­தது. மேலும், ஊதிய வளர்ச்சி அடையும் அதே­வேளை­யில் வேலை­யின்மையும் அதி­க­ரிக்­கும் என்று எதிர்பார்க்­கப்­படு­வ­தா­க­வும் அது கூறியது. என்றா­லும், சில துறை­களில் மட்டுமே வர்த்­தக வளர்ச்சி மெது­வடை­யும் என்றும் முன்னைய உலக நிதி நெருக்­கடி சம­யத்­தில் ஏற்­பட்­ட­து­போன்ற வீழ்ச்சி இருக்­காது என்றும் மத்திய வங்கி குறிப்­பிட்­டது.

சிங்கப்­பூ­ரின் பொரு­ளி­யல் அண்மைக் காலமாக மெது­வ­ளர்ச்­சியே அடைந்து வந்­துள்­ளது என்றும் அது கூறியது. கடந்த சில ஆண்­டு­க­ளாக நவீன சேவைத் துறை மெதுவாக விரிவு கண்டது. எனினும், உள்ளூரைச் சார்ந்த பொரு­ளி­யல் மெதுவான ஆனால் நிலையான வளர்ச்­சியைக் கண்டு வந்­துள்­ளது. உலகின் தேவை மந்த­மாக இருந்தாலும் சிங்கப்­பூ­ரின் சிறிய வெளிப் படையான பொரு­ளி­யல் கட்­டமைப்பு வளர்ச்சி காணா­த­தாலும் வர்த்­த­கம் சார்ந்த தொழில் ­கள் வளர்ச்சி அடை­ய­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!