மானபங்கம்: முதியவருக்குச் ஏழு மாதச் சிறை

18 வயது மாணவனை மானபங்கம் செய்த குற்றத்திற்காக 63 வயது முதியவருக்கு ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வோங் சியுங் போக் என்னும் அந்த முதியவருக்கு தேவாலயம் ஒன்றில் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி பேருந்தில் இருவரும் வீடு திரும்பிய வேளையில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. பேருந்தைவிட்டு இறங்கிய போது தமது வீட்டுக்கு அந்த மாணவனை முதியவர் அழைத்துள்ளார்.

அழைப்புக்கு இணங்கி வீட்டுக்குச் சென்ற மாணவனின் உடம்பைப் பிடித்து விடும் சாக்கில் வோங் மானபங்கம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனை எதிர்பாராத மாணவன் தமது மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள டி-சட்டையையும் தமது இரு கைகளையும் பயன்படுத்தி தமது உடலை மறைக்க முயன்றதாகவும் அவற்றை வோங் தள்ளி விட்டதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!