முரளி: அரசியல் என்பது உன்னத கடமை

புக்கிட் பாத்தோக் இடைத்­தேர்­த­லில் மக்கள் செயல் கட்­சி­யின் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கும் திரு முர­ளி­த­ரன் பிள்ளை நேற்று நடை­பெற்ற மசெ­க­வின் முத­லா­வது பிர­சா­ரக் கூட்­டத்­தில் முக்கிய உரை நிகழ்த்­தினார். புக்கிட் பாத்­தோக்கை ஒரு பரி­வு­மிக்க சமூ­க­மாக மாற்றும் அதே வேளையில் எந்தப் பின்­ன­ணியைச் சேர்ந்த­வ­ராக இருந்தா­லும் மக்­களுக்கு உதவி கிடைக்க வழி செய்வதே தமது முக்கிய நோக்கம் என்று திரு முரளி கூறினார்.

தம் வாழ்க்கை­யின் முதல் மதி­யுரை­ஞ­ராக காலஞ்­சென்ற தொழிற் ­சங்க­வா­தி­யான தமது தந்தை­யி­ட­மி­ருந்து எதைச் செய்­தா­லும் மக்­களின் நன்மையைக் கருதிச் செய்ய வேண்டும், அர­சி­ய­லி­லி­ருந்து விலகும் தருணம் வந்தால் உன் சட்டையைத் தவிர வேறு எதையும் உடன் கொண்­டு­செல்­லக் கூடாது, மக்­களைப் பார­பட்­ச­மின்றி மதிக்க வேண்டும், எத்­த­ரு­ணத்­ தி­லும் உண்மை­யாக நடந்­து­கொள்ள வேண்டும் என்பது போன்ற பண்­பு­களைக் கற்றுக் கொண்ட­தா­கக் கூறினார்.

அடுத்த மதி­யுரை­ஞர்­க­ளாக புக்கிட் பாத்தோக் தொகு­தி­யின் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் காலஞ்­சென்ற டாக்டர் ஓங் சிட் சுங், ஜூரோங் குழுத்­தொ­கு­தி­யின் முன்னாள் தலைமை அமைச் ­ச­ரான திரு லிம் பூன் ஹெங் ஆகி­யோரை திரு முரளி குறிப்­பிட்­டார். "அவர்­க­ளது சீரிய தலைமைத்­ து­வப் பண்­பு­கள் புக்கிட் பாத்­தோக்­கில் அடித்­த­ளத் தலை­வ­ராக இருந்த என்னை மிகவும் கவர்ந்தன. அதன் மூலம் அர­சி­யல் என்பது ஒரு பணி அல்ல; அது ஓர் உன்­ன­த­மாக கடமை என்பதை உணர்ந்­தேன்," என்று திரு முரளி விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!