ஹெலிகாப்டர் பேர ஊழல்: இத்தாலி அரசுடன் மோடி ரகசியப் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் இந்திய விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகிக்கு ஹெலிகாப்டர் ஒப்பந்தப் பேர ஊழல் வழக்கின் தொடர்பில் அழைப்பாணை அனுப்பியுள்ளன. பிரதமர், அதிபர் உள்ளிட்ட விஐபிக்களின் பயன்பாட்டுக்காக அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறு வனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க 2010ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தைப் பெற இந்திய அரசியல் தலைவர்கள், விமானப்படை அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் தொடர்பில் இத்தாலி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அகஸ்டாவெஸ்ட் லேண்ட் முன்னாள் அதிகாரி களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரி கள் பெயர்களும் இடம்பெற்றுள் ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பில் எஸ்.பி. தியாகிக்கு அமலாக்கத் துறை நேற்று முன்தினம் அழைப் பாணை அனுப்பியது. அ க ஸ் டா வெ ஸ் ட் லே ண் ட் நிறுவனத்திடம் இருந்து தியாகி யின் உறவினர்கள் சந்தீப், ராஜீவ், சஞ்சீவ் ஆகியோர் லஞ்சம் பெற்ற தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் தொடர் பாக இத்தாலி அரசுடன் பிரதமர் மோடி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படும் குற்றச் சாட்டை மத்திய அரசு மறுத் துள்ளது. சோனியா மீதான ஊழல் குற்றச்சாட்டை பாஜக தீவிரப் படுத்தி வருவதால், ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு உள்ள தொடர்பு குறித்த ஆவணங் களை அளிக்குமாறு இத்தாலி பிரதமரிடம் மோடி கேட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித் துள்ள மத்திய அரசு, "இது அடிப் படை ஆதாரமற்றது," என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் பேர ஊழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா, "இவ்விவகாரம் தொடர்பில் காங்கிரஸ் தலைவர்கள் வெட்கப்படவேண்டும்," என்றார். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!