7வது மாடி வீட்டில் தீ; முதிய ஆடவர் மரணம்

சிங்கப்பூரில் ஹும் அவென்யூ வில் இருக்கும் கூட்டு நிர்வாக அடுக்குமாடி வீடு ஒன்றில் நேற்று அதிகாலை நேரத்தில் தீ மூண்டது. அதில் முதியவர் ஒருவர் பலியா னார். அந்த ஆடவரின் மனைவி தீப்புண்ணால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஹில்வியூ கிரீன் கூட்டு நிர்வாக அடுக்குமாடி புளோக்கில் ஏழாவது மாடியில் இருக்கும் வீடு ஒன்றில் தீ மூண்டதாக நேற்று அதிகாலை சுமார் 5.35 மணிக்குத் தனக்குத் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. உடனடியாக அந்தப் படை அங்கு விரைந்தது. தானியங்கி தீயணைப்பு வாகனம், இரண்டு ஆதரவு வாகனங்கள், ஐந்து மருத் துவ வண்டிகள் ஆகியவற்றைக் குடிமைத் தற்காப்புப் படை அங்கு அனுப்பியது. வீட்டில் இருந்தோரில் மூன்று பேர் ஏற்கனவே பாதுகாப்பாக வெளியேறி இருந்தனர் என்று அந்தப் படை கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!