பொருளியல் சரியில்லை என்றாலும் பேரங்காடிகளில் விற்பனை அதிகரிப்பு

பொருளியல் நிலவரம் பலவீனமாக இருக்கிறது என்றாலும் இணையம் வழி பொருட்களை வாங்கும் வசதிகள் அதிகரித்துவரும் நிலையிலும் சிங்கப்பூரில் மக்கள் பேரங்காடிகளில் அதிக பணத்தைச் செலவிடுகிறார்கள். அரசாங்கத்தின் பூர்வாங்கப் புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், சென்ற ஆண்டில் பேரங்காடிகளில் வாங்கப் பட்ட பொருட்களின் மதிப்பு $2.3 பில்லியன் என்பது தெரியவருகிறது. இந்த அளவு கடந்த 2005ல் $1.2 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டின் அளவுதான் பத்து ஆண்டுகளில் ஆக அதிகம். பொருட் களின் அதிக விலை, தரமிக்க பொருட்களில் பணத்தைச் செலவிடும் ஆசை, வீட்டுச் சாப்பாட்டில் நாட்டம் ஆகியவை இதற்குக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையம் வழி பொருட்களை வாங்கும் நடைமுறை தங்களைப் பாதிக்கவில்லை என்று பல பேரங்காடிகள் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிட்டது. சிங்கப்பூரில் 130 கடைகளைக் கொண்டுள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் கடைகளில் விற்பனை 2013 முதல் 10%க்கும் அதிகமாகக் கூடி வந்துள்ளது. புத்தம் புதிய பால், மீன், உணவுப் பொருட்கள் முதலா னவை அதிகம் விரும்பப்படுவதாக இந்த நிறுவனம் தெரி வித்தது. ஷெங் சியோங் கடைகளில் கடந்த ஆண்டில் விற்பனை 5.3% அதிகரித்தது. இந்த நிறுவனம் 40 கடைகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் 46 கிளை களைக் கொண்டுள்ள கோல்டு ஸ்டோரேஜ் கருத்து தெரிவிக்கவில்லை. ஜயண்ட் நிறுவனம் இந்த ஆண்டில் புதிய கடை ஒன்றைத் திறந்தது. அதேபோல் ஒரு கடையைத் திறந்த ஷெங் சியோங், மேலும் கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!