வேலையிழந்தோருக்கு உதவுவதே நோக்கம் - முரளிதரன்

புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று அந்தத் தனித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தாம் தேர்வு பெற்றால், அங்கு வேலையிழந்து தவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க வழி செய்வதே தமது திட்டங்களில் முக்கியமானதாக இருக்கும் என்றார் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை. நேற்றுக் காலை புக்கிட் பாத் தோக் பேருந்து சந்திப்பு நிலையத்தில் குடியிருப்பாளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார் திரு முரளி. அவருடன் துணைப் பிர தமர் தர்மன் சண்முகரத்னமும் இதர மசெக முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடித்தளத் தலைவர்களும் இருந்தனர்.

இத்திட்டத்தை வழிநடத்த சமூகத்தில் உள்ள கட்டமைப்பு, மக்கள் தொடர்பு ஆகியவற்றின் உதவியுடன் வேலையிழந்த ஊழியர்களுக்குத் தகுந்த வேலைகளைத் தேடித் தர ஆவன செய்யப் படும் என்று 48 வயது திரு முரளி செய்தியாளர்களிடம் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!