மரணதண்டனையை நீக்கக்கோரி கருணை மனு

கொலைக்குற்றத்திற்காக சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசிய நாட்டவரான ஜேபிங் கூவுக்கு ஆதரவாக கருணை மனு கொடுக்கப்பட்டுள்ளது. 'வீ பிளீவ் இன் செகண்ட் சான்ஸ்' என்ற அமைப்பு அந்த மலேசியரை காப்பாற்றும் கடைசி முயற்சியாக சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாமுக்கு மனுவைச் சமர்ப்பித்துள்ளது. இதற்காக ஏராளமானவர்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது. சீன நாட்டவரான கா ருயின் என்பவருக்கு 2007ஆம் ஆண்டில் மரணம் விளைவித்த குற்றத்திற்காக கூவுக்கு 2013ல் ஆயுள் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப் பட்டன.

ஆனால், 2015 ஜனவரி மாதம் மேல் முறையீட்டு நீதிமன்றம் பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் மரண தண்டனை விதித்தது. 2015 நவம்பரில் கூவின் வழக்கறிஞர் கடைசி நேரத்தில் தண்டனைக்கு எதிராக விடுத்த கோரிக்கையினால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் அந்தத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. அனைத்து சட்ட வழிமுறைகளும் அடைக்கப்பட்டு விட்ட நிலையில் கருணை மனு மட்டுமே கூவுக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!