கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது

கன்டோண்மெண்ட் குளோஸ் பகுதியில் மாது ஒருவரிடம் ஆயுதத்தைக் காட்டி பணத்தையும் கைத்தொலைபேசியையும் கொள்ளையடித்த குற்றத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிறு மாலை 5.30 மணி அளவில் அச்சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் சந்தேகத்துக்குரியவரை போலிசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட கைத்தொலைபேசி கைப்பற்றப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் ரெட்ஹில் குளோசில் 72 வயது ஆடவரின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டது. மின்தூக்கி நிறுத்துமிடத்தில் ஞாயிறு பகல் 1.10 அளவில் நடந்த அச்சம்பவத்தில் முதியவர் காயமுற்றதாக போலிஸ் தெரிவித்தது. அன்று மாலை 3 மணி அளவில் சந்தேகத்துக்குரியவரை போலிசார் கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய முதல் சில்லறை விற்பனை எரிபொருள் நிறுவனம் எனும் பெருமையை ‘ஷெல்’ நிறுவனம் பெற்றுள்ளது. படம்: ஷெல்

20 Aug 2019

வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதி: ‘ஷெல்’ அறிமுகம்

இவ்வாண்டில் சிங்கப்பூர் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது. பின்லாந்தின் எண்ணெய் நிறுவனமான நெஸ்ட் தனது எரிசக்தி புதுப்பிப்பு ஆலை விரிவாக்கத்தில் $2 பில்லியன் செய்யவிருக்கும் முதலீடும் அவற்றுள் அடங்கும். சிங்கப்பூர் துறைமுக கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Aug 2019

சிங்கப்பூர் பொருளியல் இன்னும் மோசமான கட்டத்தை நெருங்கவில்லை