கிழக்கு- மேற்கு ரயில் பாதையில் 50 நிமிடங்களுக்கு சேவைத் தடங்கல்

கிழக்கு, மேற்கு ரயில் பாதையில் நேற்று 50 நிமி­டங்களுக்­குச் சேவைத் தடை ஏற்­பட்­டது. ஜூக்கூன் நிலை­யத்­துக்­கும் பூன் லே நிலை­யத்­துக்­கும் இடையே மாலை 3.45 மணி அளவில் சேவை தடைப்­பட்­ட­தாக எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் டுவீட் செய்தது. "ரயிலில் ஏற்­பட்ட கோளா­றினால் ஜூக்கூன் நிலை­யத்­துக்­கும் பூன் லே நிலை­யத்­துக்­கும் இடையே இரு வழிப் பாதைகளில் ரயில் சேவை இருக்­காது. 4.05க்கு சேவை தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது," என்று அந்த டுவீட் செய்தி தெரி­வித்­தது. பின்னர் 4.30க்கு சேவை தொடங்­கும் என மீண்டும் தெரி­வித்­தது. 50 நிமி­டங்கள் கழித்து, கிழக்கு, மேற்கு இரு தடங்களி­லும் சேவை மீண்டும் தொடங்­கி ­யது. சேவை தடைப்­பட்ட நேரத்­தில் இலவச பேருந்து சேவை வழங்கப்­பட்­டது. கடந்த 10 நாட்­களுக்­குள் ரயில் சேவையில் மூன்றா­வது தடவை­யாக தடங்கல் ஏற்­பட்­டுள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!