உழைப்பால் பங்களிப்போருக்கு உணவளித்து உற்சாகம்

லாப­நோக்­க­மற்ற அமைப்­பான ‘புரொ­ஜெக்ட் சூலியா ஸ்திரீட்’டைச் சேர்ந்த 45 தொண்­டூ­ழி­யர்­கள் டோ குவானிலுள்ள வெஸ்ட்லைட் ஊழியர் தங்கும் விடு­தி­யில் ஏறக்­குறைய 2,000 ஊழி­யர்­களுக்கு ஊட்­டச்­சத்து சேர்க்­கப்­பட்ட சோறும் மீன்­தலைக் கறியும் அளித்­த­னர். கடந்த மாதம் தொடங்கப்­பட்ட இந்த அமைப்பு, இங்­குள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு நல்ல ஊட்­டச்­சத்து, பல் சுகாதார சேவை போன்ற­வற்றை வழங்­கு­வ­து­டன் திறன் வகுப்­பு­களை நடத்­த­வும் திட்­ட­மிட்­டுள்­ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்