என்டியுவில் புதிய பள்ளி

வேலை­செய்­ப­வர்­களுக்கு அதிக படிப்­பு­களை வழங்­கும் நோக்கில் புதிய பள்­ளி­யொன்றை நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் (என்டியு) அமைத்­துள்­ளது. நிபு­ணத்­து­வம், தொடர்­கல்­விக் கல்லூரி (PaCE) என்று அழைக்­கப்­படும் அந்தப் பள்ளி, நிபு­ணர்­ கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கிகள் உட்பட பணியில் இருப்­போ­ருக்­கான பயிற்சி வகுப்­பு­களை தேசிய தொழிற்­சங்கக் காங்­கி­ர­சு­டன் இணைந்து உரு­வாக்­கும்.

என்­டி­யு­சி­யு­டனான பங்கா­ளித்­து­வத்­தின் கீழ் இந்தப் புதிய பள்ளி பகு­தி­நேர மாண­வர்­ களுக்கு 28 பட்­டப்­ப­டிப்­பு­களை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்­கும். வகுப்­பு­கள் என்டியு அல்லது என்­டி­யுசி வளா­கங்களில் நடத்­தப்­படும். வகுப்­பு­கள் இணை­யத்­தி­லும் நடத்­தப்­ப­ட­லாம். அதே­நே ­ரத்­தில், நகரப் பகு­தி­யில் வகுப்­பு­களை நடத்­து­வதற்கு இடங்களை ஆராய்­வ­தா­க­வும் என்டியு தெரி­வித்­தது. இந்தப் பள்­ளி­யில் பயில விரும்­பு­வோ­ரின் கல்விப் பின்­ன­ணி­யு­டன் வேலை அனு­ப­வ­மும் கருத்­தில் கொள்­ளப்­படும்.

தகவல் ஆய்வு, மின்­னி­லக்க மின்­னி­யல், தொழில்­முனைப்பு புத்­தாக்­கம் போன்ற துறை­களில் மூன்று மாத பயிற்சி வகுப்­பு­கள் வழங்கப்­பட உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்­பு­கள் என்­டி­யு­வின் பட்­டக்­கல்­வித் திட்­டங் களில் இருந்து வடி­வமைக்­கப்­பட்­டவை. இப்­ப­யிற்­சியைப் பெறுவோர், இத்­த­கு­தியை நிபு­ணத்­துவ சான்­றி­தழ் அல்லது பட்­டக்­கல்­விக்­குப் பயன்­படுத்­த­லாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணொளி எடுக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

22 Apr 2019

கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரும் மனு

சான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

22 Apr 2019

‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’