வெளிநாட்டு ஊழியர்களின் ‘அக்கா’வுக்கு உழைப்பாளர் விருது

வெளி­நாட்டு ஊழி­யர்­களின்­பால், குறிப்­பாக தமிழ்­நாட்­ட­வர் மீது அன்பு காட்டும் கோக் சாங் தனியார் நிறு­வ­னத்­தின் நிர்வாக இயக்­கு­நர் டெபி ஙென்­னுக்கு 'உழைப்­பா­ளர் விருது' வழங்­கிச் சிறப்­பித்­துள்­ளது மக்கள் கவிஞர் மன்றம். ஞாயிற்­றுக்­கிழமை உமறுப் புலவர் தமிழ்­மொழி நிலைய அரங்­கில் நடை­பெற்ற மக்கள் கவிஞர் மன்றத்­தின் பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்த­ரம் கலை இலக்­கிய விழாவில் அவ­ருக்கு இவ்­வி­ருது வழங்கப்­பட்­டது. 'அக்கா' என்று தமிழ் ஊழி­யர்­க­ளால் அன்போடு அழைக்­கப்­ படும் டெபி, தன் ஊழி­யர்­களுக்கு கடந்த 15 ஆண்­டு­களுக்­கும் மேலாக பண்­டிகைக் காலப் பரி­சு­கள் வழங்கி வரு­வ­து­டன் அவர்­களின் நல­னி­லும் குடும்ப நல­னி­லும் மிகுந்த அக்கறை காட்டி வரு­­வதைப் பாராட்டி இந்த விருது வழங்கப்­பட்­ட­தாக மக்கள் கவிஞர் மன்றம் தெரி­வித்­தது.

"வச­தி­யில்­லாத சூழ்­நிலை­யில் வளர்ந்த எனக்கு பசி என்றால் என்­ன­வென்று தெரியும். வரு மானத்திற்காக இந்­நாட்­டுக்கு வந்து உழைத்து, நம் வளர்ச்­சிக்கு உதவும் ஊழி­யர்­களைப் பார்த்­துக்­கொள்­­வ­தும் அவர்­களுக்­குப் போதிய உணவு கிடைப்­பதை உறுதி­ செய்­வ­தும் நமது கடமை," என்று அவர் தமது உரையில் கூறினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான நியமன நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி கே.தனலட்சுமியிடம் இருந்து உழைப்பாளர் விருதைப் பெறும் டெபி ஙென் (இடது). விழா மேடையில் 4 மடிக்கணினிகளை இலவசமாக மன்றத்திடம் கொடுத்த டெபி, அவற்றைத் தகுதி வாய்ந்த கட்டுமான ஊழியர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். படம்: மக்கள் கவிஞர் மன்றம்

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான நியமன நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி கே.தனலட்சுமியிடம் இருந்து உழைப்பாளர் விருதைப் பெறும் டெபி ஙென் (இடது). விழா மேடையில் 4 மடிக்கணினிகளை இலவசமாக மன்றத்திடம் கொடுத்த டெபி, அவற்றைத் தகுதி வாய்ந்த கட்டுமான ஊழியர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். படம்: மக்கள் கவிஞர் மன்றம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!