பிரதமர் பெயரில் புதிய விருது

பலதுறைத் தொழில்கல்லூரி மாணவர்கள், இருவழித்தொடர்பு மின்னி லக்க ஊடகத் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் புதிய விருதுக்கு அடுத்த ஆண்டிலிருந்து விண்ணப்பம் செய்யலாம். ‘லீ சியன் லூங் இருவழித் தொடர்பு மின்னிலக்க ஊடக அறி வார்ந்த தேச விருது’ என்றழைக் கப்படும் அறக்கட்டளை நிதி, பிர தமர் வழங்கிய $250,000 நன் கொடையுடன் சாத்தியமானது. ரிபப்ளிக் பலதுறைத் தொழில் கல்லூரி நேற்று நடத்திய இவ் வாண்டின் முதல் பட்டமளிப்பு விழாவின்போது தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் விருதை அறிவித்தார். “தொழில்கல்லூரி மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திற னையும் பயன்படுத்தி சிங்கப்பூரர் களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அல்லது சமூக உறவை வலுப் படுத்தும் இருவழித்தொடர்பு மின் னிலக்க ஊடகத் திட்டப்பணிகளை மேற்கொள்ள விருது ஊக்கமளிக் கிறது,” என்றார் அவர்.