வசதி குறைந்த மாணவர்களுக்கு புதிய மதியுரைஞர் திட்டம்

தமிழவேல்

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்காக புதிய மதியுரை திட்டத்தை மசெக வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை தொடங்கத் திட்டமிட்டுள் ளார். தமது தேர்தல் அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டுள்ளது என்ற அவர் இந்தத் திட்டத்தின் விவரங்களை நேற்று செய்தியாளர் களிடம் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களுக்கும் உதவிகள் பெற முடியாத நடுத்தர வருமான குடும்பங்களுக்கும் இத்திட்டம் உதவும் என்றார் அவர். “சில குடும்பங்கள் பிரச்சினை களை எதிர்நோக்கலாம். சில சம யம் கணவரோ மனைவியோ உடன் இல்லாத சூழல் நிலவலாம். வேலைப் பளு காரணமாக குழந் தைக்கு ஏற்ற ஆதரவு கிடைக் காமல் இருக்கலாம்.

திரு முரளி நேற்றுக் காலை 7.30 மணியளவில் வேலைக்குச் செல்லும் குடியிருப்பாளர்களுடன் இதர மக்களையும் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் இறங்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்