கடன்முதலை காரியம்: சந்தேகப்பேர்வழி கைது

கடன்முதலை காரியங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக் கப்படும் 19 வயது பையன் ஒருவன் கைதானதாகச் சிங்கப்பூர் போலிஸ் தெரிவித்துள்ளது. ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் இருக்கும் வீடு ஒன்றின் உரிமையாளர் தன்னுடைய வீட்டுக் கதவில் வண்ணம் ஊற்றப்பட்டு, கதவு சைக்கிள் சங்கிலியால் பூட்டப்பட்டு, கடல்முதலை செய்கைபோல் வீட்டில் கிறுக்கப்பட்டு இருப்பதாக போலிசிடம் புகார் தெரிவித்தார். போலிஸ் படச்சாதனம் மூலமாகவும் விசாரணையின் பலனாகவும் சந்தேகப்பேர்வழியை அடையாளம் கண்டது. அவரை கிளமெண்டி பிரிவு போலிஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சுங்கை கெடோங் ரோட்டில் கைது செய்தனர். சாட்சியமாக அவரிடம் இருந்து செல்பேசி ஒன்று கைப்பற்றப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.

பிடோக், பாரிர் ரிஸ், யீசூன், செம்பவாங், உட்லண்ட்ஸ், மார்சிலிங், தெம்பனிஸ், லோர் ஆ சூ ஆகிய பகுதிகளில் இதேபோன்ற காரியங்களில் அந்தப் பேர்வழி ஈடுபட்டு இருப்பது பூர்வாங்கப் புலன்விசாரணை மூலம் தெரியவந் துள்ளது. சந்தேக நபர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும். குற்றவாளி எனில் அவருக்கு $50,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுவரை சிறை, ஆறு பிரம்படிகள் வரை தண்டனையாக விதிக்க இடம் இருக்கிறது.