டாக்டர் சீ: முழு மனதுடன் உங்களுக்காக முழுநேர எம்.பி. ஆக செயல்படுவேன்

புக்கிட் பாத்தோக் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் முழுநேர பணியில் ஈடுபடுவார் என்றும் வீடமைப்பும், சமூக திட்டங்கள் எனக் குடியிருப்பாளர்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்ய முயல்வார் என்றும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலை மைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் கூறினார்.

நேற்று நடைபெற்ற இறுதித் தேர்தல் பிரசாரத்தில் இறுதி நபராக பேசிய அவர், நகரமன்ற பொறுப்புகளை மக்கள் செயல் கட்சியிடமிருந்து தங்கு தடை யின்றி ஏற்றுக்கொள்ள ஏற்கெ னவே கைதேர்ந்த நபர்களால் ஒரு குழுவை அமைத்துள்ளதாக வும் குறிப்பிட்டார். "வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை மேம்படுத்தும் திட்டங் களை நிறைவேற்றுவதுடன் கூடு தலான உணவங்காடி நிலையங் கள், பிள்ளை மற்றும் மூத்தோர் பராமரிப்பு நிலையங்களை உரு வாக்குவதில் கட்சி கூடுதலான கவனம் செலுத்தும்" என்றார் டாக்டர் சீ.

தமது கட்சி முன் வைத்தி ருக்கும் திட் டங்கள் புக்கிட் பாத்தோக் மக் களுக்கு நன்மை பயக்கும் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலை மைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!