தர்மன்: மக்கள் நலனுக்காகப் பாடுபடும் செயல் வீரர் முரளிதரன்

கடந்த ஒன்பது நாட்களாக புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களை இத்தொகுதியின் பல்வேறு இடங் களிலும் அவர்களின் வீடுகளிலும் சந்தித்துப் பேசி, அவர்களின் பொதுவான பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து கொண்டுள் ளேன் என்று கூறினார் புக்கிட் பாத்தோக் தொகுதி இடைத் தேர் தலில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை.

மற்ற தொகுதிகளைப் போல தமது தொகுதியிலும் தங்களுக் குத் தேவையான சேவைகளும் திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதில் இத்தொகுதி மக்கள் பேரார்வம் கொண்டுள்ளார்கள். உங்கள் தேவைகளைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு எனக்கு உங்களின் நல்லாதரவை உங்கள் வாக்குகள் மூலம் எனக்கு அளியுங்கள்," என்று திரு முரளி தெரிவித்தார். புக்கிட் கோம்பாக் விளையாட் டரங்கில் நேற்று நடைபெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திரு முரளி, "வசதி குறைந்த மக்களுக்கும் நடுத்தர வருமானப் பிரிவினருக்கும் உதவு வதே எனது முன்னுரிமை இலக்கு," என்று கூறினார்.

தாம் வசிக்கும் புக்கிட் பாத்தோக் தொகுதியில் திரு முரளிதரன் பிள்ளையை நேற்றுக் காலை நேருக்கு நேர் சந்தித்த குடியிருப்பாளர் ஒருவர் அவரைக் கட்டி அணைத்து தமது ஆதரவைத் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!