புதிய ‘மைஇன்ஃபோ’ சேவை

அரசாங்க அமைப்புகளின் இணை யச் சேவைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு இனி கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதுதான் நேற்று அறிமுகம் கண்ட ‘மைஇன்ஃபோ’ சேவை. இதன் மூலம் அரசாங்க அமைப்புகளின் சேவைகளுக்கான இணையப் படிவத்தை மக்கள் சிர மம் இல்லாமல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

உதாரணத்துக்கு, ஒரு வீட் டுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழ கத்திடம் விண்ணப்பிக்கும்போது அல்லது ஓட்டுநரின் தண்டப் புள் ளிகளைத் தெரிந்துகொள்ள போக்குவரத்து போலிஸ் துறைக்கு எழுதும்போது மக்கள் தங்கள் விவரங்களை எளிதில் பதிந்து கொள்ளலாம். பெயர், அடையாள அட்டை எண், பதிவு செய்யப்பட்ட முகவரி போன்ற விவரங்களைப் படிவத்தில் நிரப்பும்போது, இதர விவரங்கள் தானாக படிவத்தில் நிரப்பப்பட்டு விடும்.

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், உள்நாட்டு வருவாய் ஆணையம், நகர மறுசீரமைப்பு ஆணையம் போன்ற அரசாங்க அமைப்புகளின் தகவல் பெட்டகத்திலிருந்து இந்த விவரங்கள், ஒரு சேவையை நாடும் ஒருவர் விண் ணப்பிக்கும்போது தானாக அங்கு பதியப்படும். இதனால், ஒரு படி வத்தை முழுமையாகப் பூர்த்தி செய்வதில் செலவிடப்படும் நேரம் கணிசமாகக் குறைக்கப்படுகிறது. ‘மைஇன்ஃபோ’ சேவை இவ் வாண்டு ஜனவரி மாதம் முதல் மூன்று மாதச் சோதனைக்கு உட் படுத்தப்பட்டது. அதை 32,000 பேர் பயன்படுத்தினார்கள்