தேர்தல் சட்டத்தை மீறியதாக புகார்

தி மிடில் கிரவுண்ட் (TMG) என்ற இணையச் செய்தித்தளம் நாடாளு மன்றத் தேர்தல் சட்டத்தை மீறி விட்டதாகக் கருதப்பட்டதை அடுத்து அந்தத் தளத்துக்கு எதி ராக போலிசில் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் அந்தப் புகாரைத் தகவல் சாதன மேம்பாட்டு ஆணையம் நேற்று பிற்பகல் 12.40 மணிக் குக் கொடுத்தது. “பிபி பிபி: புக்கிட் பாத்தோக்கில் 50 வாக்காளர் கள்” என்ற அந்த இணையத்தளச் செய்தியை பிற்பகல் 3.30 மணிக்குள் அகற்றும்படி அந்தத் தளத்துக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையத் தளத்தில் மே 5ஆம் தேதி வெளியாகி இருந்த அந்தச் செய்தி, தேர்தலில் எப்படி வாக்களிப்பீர்கள் என்று கடந்த வாரத்தில் 50 புக்கிட் பாத்தோக் வாக்காளர்களைக் கேட்டது.

Loading...
Load next