சிராங்கூன் ரோடு உணவுக்கடையில் திருட்டு

சிராங்கூன் ரோட்டில் இருக்கும் உணவுக்கடை ஒன்றில் கன்ன மிட்டு $450 திருடியதாகக் கூறப் பட்டதன் பேரில் 22 வயது ஆடவர் ஒருவர் கைதாகி இருக்கிறார். அந்த உணவகத்தில் கன்ன மிடப்பட்டு திருடப்பட்டதாக மே 5ஆம் தேதி அதிகாலை 1.08 மணிக்குப் போலிசுக்குத் தகவல் வந்தது. போலிஸ் உடனே அந்தச் சந்தேகப்பேர்வழியை அடையாளம் கண்டது. அதேநாளன்று அவர் லியாங் சியா ஸ்திரீட்டில் கைது செய்யப்பட்டதாகவும் போலிஸ் தெரிவித்தது. சந்தேக நபர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும். குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு இரண்டு முதல் 14 ஆண்டு வரைப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்