ஓய்வு நாளில் புக்கிட் பாத்தோக் வேட்பாளர்கள்

ப. பாலசுப்பிரமணியம்

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் வாக்களிப்பு இன்று நடக்கிறது. அதையொட்டி நேற்று ஓய்வு நாளாக இருந்தது. பிரசாரம் எதுவும் ஓய்வு நாளில் இடம்பெறக் கூடாது என்பதால் நேற்று கட்சி களின் பொதுக் கூட்டப் பிரசாரம் இடம்பெறவில்லை. வாக்களிப்பு நாளன்றும் ஓய்வு நாளன்றும் வேட்பாளர்களும் அவர் களின் ஆதரவாளர்களும் என்ன என்ன செய்யலாம், என்ன என்ன செய்யக்கூடாது என்பதை தேர் தல் துறை ஏற்கெனவே அறிவித் தது. ஓய்வு நாள் என்ற ஏற்பாடு 2011ல் அறிமுகம் கண்டது. வாக்களிக்கச் செல்லும் முன் இடைத் தேர்தல் பிரசாரத்தில் எழுப்பப்பட்ட பல்வேறு பிரச்சினை களைச் சீர்தூக்கிப் பார்த்து யாருக்கு வாக்களிப்பது என்பதை வாக்காளர்கள் ஆற அமர சிந் தித்து முடிவு செய்ய ஏதுவாக பிரசார ஓய்வுநாள் திட்டம் நடப் புக்கு வந்தது.

புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு வாக்குச் சாவடிகள் திறக்கப்படும். இரவு 8 மணிவரை வாக்களிக்கலாம். அடையாள அட்டை அல்லது பாஸ் போர்ட்டை எடுத்து வந்து வாக் காளர்கள் வாக்கு அளிக்கலாம். வாக்குச் சாவடிக்குள் புகைப் படச் சாதனங்கள், காணொளி எவற்றுக்கும் அனுமதி இல்லை. மேல் விவரம் அறிய மக்கள் தேர்தல் துறை இணையப்பக்கத் துக்குச் செல்லலாம். புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்படும். அதற் கான கூட்டங்களுக்கு இரண்டு இடங்களைப் போலிஸ் ஒதுக்கி இருக்கிறது. இதற்கிடையே, கடந்த ஒன்பது நாட்களாக தொடர்ந்து பிரசாரம் செய்து நேற்று அதிலிருந்து ஓய்வு எடுத்து குடும்பத்துடன் சற்று நேரம் செலவழித்ததாக கூறினார் புக்கிட் பாத்தோக் தொகுதியில் போட்டியிடும் மசெக வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை.

பிரசார ஓய்வு நாளான நேற்று அவர் குடும்பத்தினரோடு காலை உணவு சாப்பிட்டுவிட்டு, ஜூரோங் கில் அமைந்துள்ள ஒரு தொண்டூ ழிய நல்வாழ்வு அமைப்பில் சில நண்பர்களைச் சந்தித்தார். பிற்பகல் நேரத்தில் ஜூரோங் கில் அமைந்துள்ள ஒரு காப்பிக் கடையில் அவர் சக மசெக ஆர் வலர்களைச் சந்தித்து மதிய உணவு உண்டார். "ஒன்பது நாட்கள் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டது தீவிரமாக இருந்தது. என் குடும்ப உறுப் பினர்கள் எனக்கு ஆதரவு கொடுக்க பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். "அவர்களின் வருகை எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது," என தெரிவித்தார் திரு முரளி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!